×

ராகுல் காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்

ஆவடி, ஏப். 16: ராகுல் காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராகுல் காந்திக்கு எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் லயன் ரமேஷ் தலைமையில் ஆவடி நேரு பஜாரில் தொடங்கி, ஆவடி ரயில் நிலையம் வரை ஊர்வலமாக சென்று நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர், ரயில் மறியலில் ஈடுபட வந்த காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், ஜெயக்குமார் எம்பி, காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் மற்றொரு பகுதியான ஆவடி சி.டி.எச் சாலையை ஒட்டி உள்ள ரயில் தண்டவாளத்தின் மீது திடீரென ஏறி சென்னையில் இருந்து சைடிங் வரை செல்லும் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.

இதேபோல், திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் ரயிலையும் மறித்து, காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஆவடி போலீசார் மறியல் செய்தவர்களை கைது செய்தனர். பின்னர், ஆவடி காமராஜர் நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்களை அடைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்யப்பட்டு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ரயில் மறியல் போராட்டத்தால் 45 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால், ஆவடி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவடி மாநகர தெற்கு தலைவர், மணிகண்டன், விவசாய பிரிவு மாநில தலைவர் பவன் குமார், அபிஷேக், வெள்ளிவேல் குமரன், அன்புக்கரசன், கவியரசன், அஜய் காந்தி, கிஷோர் குமார், ரிஷி, மதன்மகேஷ், ரிஷிகேஷ். ஜாக், ராஜன் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

The post ராகுல் காந்தி எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Raqul Gandhi ,Congress ,P. Awadi ,M. ,congress party ,Rahaul Gandhi ,
× RELATED நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை...